புலம்பெயர் தொழிலாளர்களுக்கான புதிய தற்காலிக விசா திட்டம்: அறிமுகம் செய்துள்ள பிரபல நாடு

12

நியூசிலாந்து (NewZealand)  புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பயனுள்ள வகையில் புதிய தற்காலிக விசா திட்டமொன்றை அறிவித்துள்ளது.

அதாவது, சில பருவ கால தொழிலாளர்களுக்கு புதிய தற்காலிக விசா வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

பருவத்தின் உச்சநிலைகளை சந்திக்கும் துறைகளில் உள்ள நிறுவனங்களுக்கு உதவுவதற்காக, Specific Purpose Work Visa எனும் புதிய துணைப்பிரிவை அறிமுகப்படுத்தியுள்ளது.

2024-ஆம் ஆண்டு ஒகஸ்ட் 15ஆம் திகதி, நியூசிலாந்து அரசு இந்த புதிய துணைப்பிரிவை அறிவித்தது. இந்த விசா, பருவம் மாறும் போது நேரடியாக பாதிக்கப்படும் தொழில்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.

உதாரணமாக அறுவடை, பனிச்சறுக்கல் கற்றல், அல்லது மரம் நடுதல் போன்ற தொழில்களுக்காகும்.

இந்த வேலை 2025 மே 31-க்குள் தொடங்கப்பட வேண்டும் மற்றும் 9 மாதங்கள் அல்லது அதற்குள் முடிவடைய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விசாவிற்குத் தகுதிப் பெற, தொழிலாளர்களுக்கு வேலைகள் குறைந்தபட்சம் 30 மணி நேரம் வழங்கப்பட வேண்டும்.

ஒரு மணிநேரத்திற்கு குறைந்தபட்சம் NZD 29.66 (சுமார் இலங்கை ரூ.5,540) சம்பளம் வழங்கப்பட வேண்டும். மேலும், தொழிலில் முன் அனுபவம் 4 மாதங்கள் இருக்க வேண்டும். இந்த விசா மாற்றம் காலவரையற்றதாக இருக்காது; இது ஒரு தற்காலிக, நேரம் குறித்த நடைமுறையாகும்.

தற்போதுள்ள Accredited Employer Work Visa (AEWV) விசாவைப் பயன்படுத்தி நீண்டகால விசா மாற்றத்தை ஆய்வு செய்யும் பணியில், நியூசிலாந்து அரசு தொடர்ச்சியாக ஆலோசனைகளை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.