ரணில் கோரிய கால அவகாசம் : பசில் வழங்கிய காலக்கெடு – கொதிநிலைக்குள் கொழும்பின் அரசியல்

13

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர்; பசில் ராஜபக்சவுக்கும் இடையில் எட்டப்பட்ட உடன்படிக்கையை, கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ளார்.

இதன்படி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதா? இல்லையா? என்பது குறித்து ஜனாதிபதி விக்ரமசிங்க தனது தீர்மானத்தை முதலில் அறிவிக்க வேண்டும் எனவும், அதன் பின்னர் பொதுஜன பெரமுன தனது நிலைப்பாட்டை ஜூன் 16ஆம் திகதியன்று அறிவிக்கும் எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து 25 பேர் தமக்கு ஆதரவளிப்பதாக பசிலுடனான சந்திப்பின்போது ரணில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே அவர்களை தம்பக்கம் வர வைப்பதற்காக ஜூன் 15 வரை அவகாசம் வழங்குமாறு ரணில், பசிலிடம் கோரியுள்ளார்.

இதன்போது பதிலளித்துள்ள பசில், எதிர்க்கட்சியின் 25 உறுப்பினர்கள், ரணிலுக்கு ஆதரவளித்தால், தமது கட்சியும் ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு ஆதரவளிக்கும் என்று உறுதியளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் ரணிலின் மதிப்பிட்ட எண்ணிக்கை அதிகம் என்றும், ஐக்கிய மக்கள் சக்தியின் 10 முதல்; 12 உறுப்பினர்களே ரணிலுக்கு ஆதரவளிப்பர் என்றும் எதிர்க்கட்சி தரப்பில் இருந்து தெரியவந்துள்ளது.

இதற்கிடையில் ரணிலுக்கு ஆதரவு வழங்குவோரின் கோரிக்கைககள் தொடர்பில் அவர்களுடன், ரணில் தரப்பினால்; உடன்படிக்கைகளும் செய்துக்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Comments are closed.