அழுத்தம் கொடுக்கும் மஸ்க்: பதவி விலகிய டெஸ்லா துணை தலைவர்

12

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கின் (Elon Musk) டெஸ்லா (Tesla) கார் உற்பத்தி நிறுவனத்தின் துணை தலைவரான இந்தியாவைச் (India) சேர்ந்த ஸ்ரீலா வெங்கடரத்னம் (Sreela Venkataratnam) தமது பதவியிலிருந்து விலகியுள்ளார்

அந்தவகையில், கடந்த 10 ஆண்டுக்கு மேலாக பணிபுரிந்து வந்த அவர் டெஸ்லா நிறுவனத்தின் துணை தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக தமது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், “டெஸ்லா நிறுவனத்தில் பணிபுரிவதை ஆரம்பத்தில் பெருமையாகக் கருதினேன். ஆனால் எலான் மஸ்கிடம் வேலை செய்வது இதயத்துக்கு நல்லதல்ல. மயக்கம் வரும் அளவுக்கு அங்கு அழுத்தம் கொடுக்கப்படுகின்றது” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சமீப காலமாக டெஸ்லா நிறுவனத்தில் இருந்து உயர் பதவியில் உள்ளோர் விலகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.