கேள்வி கேட்ட பெண் ஊடகவியலாளரை தலையில் அடித்த அரசியல்வாதி தொடர்பில் விசாரணை நடத்தப்படவுள்ளது.
இந்த சம்பவம் தாய்லாந்தில்(thailand) நடந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தாய்லாந்து நாட்டின் முன்னாள் இராணுவ தளபதியாக இருந்த பிரவிட் வாங்சுவான், பலத் பிரசாரத் என்ற கட்சியில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
மூத்த அரசியல் தலைவரான வாங்சுவானிடம் ஒரு பெண் பத்திரிகையாளர், அந்நாட்டின் புதிய பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ரா தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளார்.
அந்த கேள்வியினால் கோபமடைந்த அவர், பெண் பத்திரிகையாளரின் தலையில் அடித்துள்ளார். பின்னர் கோபத்துடன் அவர் வெளியேறிசென்றார்.இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி அந்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக பெண் பத்திரிகையாளர் முறைப்பாடு அளித்துள்ளார். இதனையடுத்து இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று அந்நாட்டு நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது.
Comments are closed.