தலதா அதுகோரளவின் பதவி விலகல் தீர்மானம் குறித்து வெளியான மற்றுமொரு தகவல்

13

ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரள இன்னமும் பதவி விலகல் கடிதத்தை ஒப்படைக்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்தும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகுவதாக தலதா கடந்த 21ம் திகதி நாடாளுமன்றில் அறிவித்தார்.

எனினும் நேற்றைய தினம் மாலை வரையில் பதவி விலகல் கடிதத்தை நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் தலாத ஒப்படைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகினால் பொதுவாக அறிவிக்கும் அதே நாளில் பதவி விலகல் கடிதங்களை ஒப்படைப்பது வழமையான நடைமுறையாகும்.

எனினும் தலதா அதுகோரள பதவி விலகுவதாக அறிவித்த போதிலும் அதிகாரபூர்மாக ஆவணங்கள் எதனையும் இதுவரையில் வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

Comments are closed.