பிரித்தானியாவின் டோர்செட்டின்(Dorset) கிறிஸ்ட்சர்ச் (Christchurch) அமைந்துள்ள பகுதியில் இளம் சிறுமி ஒருவர் கத்தியால் குத்தப்பட்டது தொடர்பாக நேற்று(21) பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், காயங்களுடன் கண்டெடுக்கப்பட்ட சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
குறித்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வயது சுமார் 8 இருக்கலாம் என்றும் அவர் தற்போது உயிருக்கு ஆபத்து இல்லாத காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் கிறிஸ்ட்சர்ச் பகுதியை சேர்ந்த 20 வயது ஆண் மற்றும் 50 வயதுடைய பெண் என இருவர் பொலிஸாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
நடந்த வன்முறை தொடர்பாக யாருக்கும் தகவல் தெரிந்து இருந்தால் விசாரணைக்கு உதவ முன்வருமாறு தலைமை கண்காணிப்பாளர் Stewart Dipple, கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
Comments are closed.