35 நாடுகளின் பிரஜைகள் இலவச விசா வசதியின் கீழ் இலங்கைக்கு பிரவேசிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, அவுஸ்திரேலியா, சவுதி அரேபியா, சீனா, இந்தியா, ரஷ்யா, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட 35 நாடுகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இதன் படி, ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் 06 மாத காலத்திற்கு இந்த வாய்ப்பு குறித்த நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சுற்றுலாப்பயணிகளின் வருகையை அதிகரிக்கும் முகமாக நாட்டின் சுற்றுலாத்தளங்களை மேம்படுத்தும் நோக்கில் பல வேலைத்திட்டங்களை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை முன்னெடுத்து வருகின்றது.
இதேவேளை, நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.