நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையுடனான காலநிலை தீவிரமடைந்து வருகின்றது.
இதனால், களுத்துறை, புத்தளம், கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
சீரற்ற காலநிலையால் இந்த மாவட்டங்களில் 1,119 குடும்பங்களை சேர்ந்த 3,432 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும், மழையுடன் வீசிய கடுங் காற்று காரணமாக குறித்த பகுதிகளில் உள்ள 76 வீடுகளுக்கு பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
Comments are closed.