கோட்டாபய ராஜபக்ச காலத்தின் இரண்டாவது அத்தியாயத்தை சஜித் பிரேமதாச நடிக்க முயற்சிக்கிறாரா என்று தான் ஆச்சர்யப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள(Thalatha Athukorala) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (21) விசேட அறிக்கையொன்றை விடுத்த அவர், அரசியல்வாதிகள் குறைந்தபட்சம் கோட்டாபய ராஜபக்சவிடம் பாடம் கற்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
அரசியலில் பொறுமை மிக முக்கியமானது என்பதை ஆட்சியாளர்கள் நடைமுறையில் நிரூபித்துள்ளனர். குறைந்தபட்சம் இப்போதாவது பாடம் கற்க வேண்டும். எனினும் சஜித் பிரேமதாச எப்படியும் தலைவராவதற்கு முயற்சி செய்கிறார் என்று தலதா குறிப்பிட்டார்.
தலைவராவதற்கு இது சரியான நேரமா அல்லது சரியான சூழலா, முயற்சி தோல்வியுற்றால் அதன் பின்விளைவுகள், அத்தகைய முடிவின் பின்விளைவுகளுக்கு அவரால் பொறுப்பேற்க முடியுமா என்று அவர் ஒருபோதும் சிந்திப்பதில்லை.
அதற்கான தலைமைப் பண்பு தன்னிடம் இருக்கிறதா என்று கூட அவர் யோசிப்பதில்லை.அவர் முதிர்ச்சியற்ற முறையில் செயற்கையான போக்கை உருவாக்கி ஆட்சியைப் பிடிக்க முயலும் போது, அவர் மனதில் எந்த திட்டமும் இல்லை என்றும் தலதா குறிப்பிட்டுள்ளார்.
இது இந்த நாட்டுக்கு புதிதல்ல. இந்தநிலையில் கோட்டாபய ராஜபக்சவின் இரண்டாவது அத்தியாயத்தை சஜித் பிரேமதாச நிரூபித்துக் காட்டுகிறாரா என்று தனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்றும் தலதா தெரிவித்துள்ளார்.
Comments are closed.