உலகின் மிக வயதான நபரான மரியா பிரான்யாஸ் மோரேரா என்னும் பெண் தனது 117 வயதில் ஸ்பெய்னில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் (US) பிறந்த இவர் இரண்டு உலக போர்களான ஸ்பெயின் உள்நாட்டுப் போர் மற்றும் 1918 காய்ச்சல் தொற்றுநோய் ஆகிய காலப்பகுதிகளை கடந்துள்ளார்.
மேலும், அவர் இந்த நூற்றாண்டின் கோவிட் பெருந்தொற்று காலத்தினையும் எதிர்நோக்கியுள்ளார்.
இந்நிலையில், கடந்த 20 வருடங்களை கட்டலோனிய முதியோர் இல்லத்தில் கழித்த இவர், 2023இல் கின்னசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
1907ஆம் ஆண்டு பிறந்து சுமார் 117 வருடங்களை வாழ்ந்துள்ள இவர், உலகின் மிக வயதான நபராக கருதப்படுகின்றார்.
Comments are closed.