ஜேர்மனியில் (Germany) கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சென்றுள்ள வெளிநாட்டு மாணவர்கள் அந்நாட்டு தேர்தல் குறித்து அச்சம் வெளியிட்டுள்ளனர்.
செப்டம்பர் மாதத்தில் கிழக்கு ஜேர்மனியின் சில பகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது.
குறித்த பகுதிகளில், வலதுசாரியினருக்கு அதிகமான ஆதரவு வழங்கப்பட்டு வருகின்றது.
இதற்கமைய, மற்ற கட்சி வேட்பாளர்கள் தீவிர வலதுசாரி ஆதரவாளர்களால் தாக்கப்படும் சம்பவங்களும் அங்கு நிகழ்ந்துள்ளன.
எனவே, வலதுசாரியினர் ஆட்சிக்கு வருவார்களானால், இந்நிலைமை மோசமடையலாம் என அச்சம் எழுந்துள்ளதாக இந்தியாவை (India) சேர்ந்த மாணவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இதன் காரணமாக எங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் ஒரு நிலை ஏற்படலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில், இவ்வாறு நடக்க வாய்ப்பில்லை எனவும் மாணவர்களின் பாதுகாப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளதுடன் தங்கள் பல்கலைக்கழங்களில் அரசியல் தலையீடு இருக்காது எனவும் பல்கலை துணைவேந்தர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments are closed.