கனடாவில் போலி ஆவணங்கள் சமர்ப்பித்த இலங்கைத் தமிழர் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒன்டாரியோவின் Whitchurch-Stouffville பகுதியை சேர்ந்த 31 வயதான கபிலரசு கருணாநிதி என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
Pickering பகுதியில் போலி இலங்கை கடவுச்சீட்டு மூலம் வங்கிக் கணக்கு ஒன்றை ஆரம்பிக்க முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இலங்கை கடவுச்சீட்டைப் பயன்படுத்தி கணக்கொன்றை ஆரம்பிக்க முயற்சித்ததாகவும், அது மோசடியானது என கண்டுபிடிக்கப்பட்டதாகவும் டர்ஹாம் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்த பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வருகைத்தந்துள்ளனர்.
போலியான இலங்கை கடவுச்சீட்டு, முற்றிலும் போலியான ஆவணம், வருமானம் பெறுவதற்கான மோசடி ஆவணங்கள் போன்றவற்றை அவர் வைத்திருந்தார் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கபிலரசு கருணாநிதி மீது இரண்டு போலி ஆவணம் வைத்திருந்தமை மற்றும் 5,000 டொலருக்கு கீழ் இரண்டு மோசடி முயற்சிகள் உட்பட பல குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.
எனினும் நீதிமன்றில் அவருக்கு எதிரான குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை. அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
Comments are closed.