தேர்தல் சட்டங்கள் தொடர்பான மற்றுமொரு அறிவிப்பு

16

தேர்தல் பிரசாரங்களுக்கு தேசிய கொடியை பயன்படுத்த வேண்டாம் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க அறிவித்துள்ளார்.

இவ்வருட ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஊடகவியலாளர்களுக்கு தெளிவூட்டும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை தேர்தல் பிரசாரங்களுக்கு தேசிய கொடியை பயன்படுத்தினால் சட்டம் நடைமுறைபடுத்தப்படும் எனவும், இது தொடருமானால் இன்னும் சில நாட்களில் தேசிய கீதம் கட்சியின் பாடலாக மாறும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஜனாதிபதி தேர்தல் முடியும் வரையில் அனைத்து தேர்தல் சட்டங்களும் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்‌.எம்‌.ஏ.எல்‌.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்செயல்களை தடுக்க பொலிஸாருக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.