காங்கேசன்துறை (Kangesanthurai) நாகபட்டினம் (Nagapattinam) பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று ஆரம்பமாகியுள்ளது.
இந்தநிலையில், இன்று (17) காலை 10.45 மணிக்கு காங்கேசந்துறை துறைமுகத்தில் இருந்து சிவகங்கை கப்பல் பயணத்தை ஆரம்பித்துள்ளது.
குறித்த பயணமானது 25 பயணிகளுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கப்பலில் செல்லும் பயணிகளுக்கு கப்பல் நிறுவனத் தலைவரால் வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த நிகழ்வில் இந்து சிறி கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர் நிரஞ்சன் நந்தகோபன் (Niranjan Nandagopan), காங்கேசன்துறை துறைமுகத்தின் அதிகாரிகள் மற்றும் கடற்படையினர் எனப் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.