தமிழில் சில படங்களே நடித்தாலும் ஒரு சில நடிகைகளை மக்கள் இன்றும் மறக்காமல் இருக்கிறார்கள்.
அந்த லிஸ்டில் இருக்கும் ஒரு நாயகி தான் வசுந்தரா தாஸ். தமிழில் 2000ம் ஆண்டு கமல் நடித்த ஹே ராம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். முதல் படமே பெரிய வெற்றியை கொடுக்க அடுத்தடுத்தும் பட வாய்ப்புகள் அதிகம் குவிந்துள்ளது.
ஆனால் திடீரென அதிகம் இந்தியில் கவனம் செலுத்தியவர் சில ஆண்டுகள் கழித்து அஜித்தின் சிட்டிசன் மூலம் தமிழ் பக்கம் வந்தார். வசுந்தரா, தமிழை தாண்டி இந்தி, மலையாளம், கன்னடம் மொழிகளிலும் நடித்துள்ளார்.
நடிகையாக மட்டுமில்லாது பாடகியாக முதல்வன் படத்தில் ஷகாலக்க பேபி, ரிதம் படத்தில் ஐயோ பத்திக்கிச்சு, சிட்டிசன் படத்தில் பூக்காரா போன்ற பல பாடல்களை பாடியுள்ளார்.
2007ம் ஆண்டிற்கு பிறகு எந்த மொழியிலும் நடிக்காமல் சினிமாவில் இருந்து காணாமல் போன வசுந்தராவின் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
Comments are closed.