2025 ஆம் ஆண்டிலிருந்து 3 ஆண்டுகளுக்குள், அரச சேவையை டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரச சேவையின் சாத்தியமான அனைத்து பகுதிகளிலும் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் தன்னியக்க மயமாக்கல் ஊடாக இலத்திரனியல் கட்டமைப்பு மூலம் அரச நிர்வாக முறைமையை (E- Governance) அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (13) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் அனைத்து அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் மாதாந்த பங்களிப்புடன், சலுகைகளை அனுபவிக்கும் வகையில் 2025 ஜனவரி முதல் மருத்துவக் காப்புறுதி முறையை நடைமுறைப்படுத்துவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
Comments are closed.