யாழில் இரு குழுக்களுக்கிடையிலான மோதலால் ஏற்பட்ட பாரிய எரியூட்டல் சம்பவம்

16

யாழ்ப்பாணம் (Jaffna) சேந்தான் குளம் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக பாரிய எரியூட்டல் சம்பவமொன்று ஏற்பட்டுள்ளது.

குறித்த வன்முறை நேற்று இரவு (13.08.2024) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில் ஏற்பட்ட மோதலின் போது, சேந்தான் குளம் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 படகுகளில் தீ மூட்டப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அப்பகுதி மக்களால் தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும், சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.