பங்களாதேஷ் (Bangladesh) இடைக்கால அரசானது மக்களுக்கு ஜனநாயகமான எதிர்காலத்தை உறுதி செய்ய வேண்டும் என அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “பங்களாதேஷ் இடைக்கால அரசுடன் அமெரிக்க அரசு தொடர்பில் உள்ளது. இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுசின் பதவியேற்பு விழாவில் அமெரிக்க தூதர் கலந்து கொண்டார் எனவும் தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் மிகப்பெரிய அளவில் வன்முறையாக வெடித்தது.
இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதையடுத்து, ஷேக் ஹசீனா பிரதமர் பதவி விலகல் செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.
இதனால் இடைக்கால அரசு அமையும் என வங்கதேச இராணுவ தளபதி தெரிவித்தார்.
இடைக்கால அரசுக்கு நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ் தலைமை ஏற்பார் என அறிவிக்கப்பட்டது. அதன்படி பங்களாதேஷில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவி ஏற்றுக் கொண்டது.
இந்நிலையில், பங்களாதேஷின் இடைக்கால அரசுடன் தொர்பில் இருந்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.