அரச மற்றும் தனியார் துறைகளுக்கு மேலதிகமாக புதிய துறை – ஜனாதிபதி அறிவிப்பு

12

அரச மற்றும் தனியார் துறைகளுக்கு மேலதிகமாக மக்கள் துறையொன்று உருவாக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மக்களை பொருளாதார ரீதியாக உயர்த்துவதற்காக இந்த துறை உருவாக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கூட்டுறவு இயக்கத்தை மக்கள் துறையின் இயக்கியாக மாற்றும் வகையில் நாட்டில் சுதந்திரமான வலுவான கூட்டுறவு இயக்கம் கட்டியெழுப்பப்பட்டு வருவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.