அரிசி தட்டுப்பாடு குறித்து வெளியான தகவல்

11

நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படாது என விவசாயத்திணைக்களம் அறிவித்துள்ளது

இம்முறை சிறுபோகத்தின் போது 2 மில்லியன் டொன் நெல் அறுவடை செய்யப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

4 இலட்சத்து 80,000 ஹெக்டயர் வயல் நிலப்பரப்பில் 77 சதவீதம் நாடு நெற்செய்கை பண்ணப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

11 சதவீதம் சம்பா நெற்செய்கையும், 12 சதவீதம் கீரி சம்பா நெற்செய்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பெரும்போக நெல் அறுவடையும் நாட்டில் இருப்பதால் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்படாது என விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Comments are closed.