தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். இவர் நடிப்பில் தற்போது GOAT படம் உருவாகி வருகிறது. இப்படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகிறது.
இதன்பின் தளபதி 69ல் நடிக்கவுள்ளார். இப்படத்தை முடித்தபின் முழுமையாக அரசியலில் களமிறங்கவுள்ளார் விஜய். விஜய்யின் கடைசி படம் என கூறப்படும் தளபதி 69-ஐ இயக்குனர் ஹெச். வினோத் இயக்கப்போவதாக சொல்லப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பும் வெளியாகுமாம்.
விஜய் தனது திரை வாழ்க்கையில் பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்துள்ளார். சில திரைப்படங்கள் தோல்வியிலும் முடிந்துள்ளது. ஆனால், அவர் நிராகரித்து சூப்பர்ஹிட்டான திரைப்படங்கள் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. அதை பற்றி பார்க்கலாம்.
விஜய் நிராகரித்து அப்படத்தில் வேறொரு நடிகர் ஹீரோவாக நடித்து சூப்பர்ஹிட்டான 5 திரைப்படங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தீனா, சிங்கம், தூள், முதல்வன் மற்றும் சண்டைக்கோழி ஆகிய 5 திரைப்படங்களையும் முதலில் விஜய் நிராகரித்துள்ளார். பின் அந்த கதையில் வேறொரு நடிகர் நடித்து அப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.