விஜய்யுடன் தான் அங்கு போக ஆசை- ஓபனாக தனது ஆசையை கூறிய ஐஸ்வர்யா ராஜேஷ்

13

சின்னத்திரையில் தனது பயணத்தை தொடங்கிய வெள்ளித்திரையில் சாதனை செய்த பிரபலங்கள் பலர் உள்ளார்கள்.

அவர்களின் லிஸ்டில் இருப்பவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். மானாட மயிலாட நிகழ்ச்சியில் தனது பயணத்தை தொடங்கியவர் அவர்களும் இவர்களும் படம் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

அட்டகத்தி படத்தில் சிறு வேடத்தில் நடித்தவர் பிறகு ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், கதை திரைக்கதை வசனம் இயக்கம் என தொடர்ந்து நடிக்க காக்கா முட்டை படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று தந்தது.

மேலும் தர்மதுரை, குற்றமே தண்டனை, லட்சுமி, வட சென்னை உள்ளிட்ட பல படங்கள் ஐஸ்வர்யா ராஜேஷ் திரைப்பயணத்தை உயர்த்தியது.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ் எந்த நாயகனுடன் இரவு உணவு செல்ல ஆசை என்று கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், நடிகருடன் டின்னர் என்றால் நான் விஜய்யுடன் செல்வேன் என்று கூறியுள்ளார்.

Comments are closed.