கனடாவிலிருந்து புலம்பெயரும் பல்லாயிரக்கணக்கான மக்கள்!

14

கனடாவில்(canada) 10 ஆண்டுகளில் இல்லாத அளவில்,பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேறி பிற நாடுகளுக்குச் செல்வதாக தெரியவந்துள்ளது.

சமீப காலமாகவே பல்வேறு காரணங்களுக்காக கனடாவை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

இதற்கமைய, 2022இல் 126,340 பேர் கனடாவை விட்டு வெளியேறி அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார்கள்.

இவ்வாறு, வெளியேறுபவர்களில் 53,311 பேர் கனடாவில் பிறந்தவர்கள்,மற்றும் 42,595 பேர் அமெரிக்காவிலிருந்து கனடாவில் வாழ வந்தவர்கள், 30,434 பேர் கனடாவுக்கு புலம்பெயர்ந்த வெளிநாட்டவர்கள் ஆவர்.

கனடாவிலிருந்து வெளியேற பல்வேறு காரணங்கள் உள்ளதாகவும் அமெரிக்கா கனடாவை விட சிறந்ததாக கருதப்பட்டதாலும் இவ்வாறு வெளியேறுவதாக கூறப்படுகின்றது.

நீங்கள் ஏன் கனடாவை விட்டு வெளியேற விரும்புகிறீர்கள் என கேட்டதற்கு, கனடாவிலிருந்து அமெரிக்காவுக்கு(America) புலம்பெயர மக்களுக்கு உதவிவரும் சட்டத்தரணி ஒருவர், எங்களுக்கு ட்ரூடோவின் ஆட்சி பிடிக்கவில்லை என பலருமு் வேடிக்கையான காரணத்தை கூறுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.

Comments are closed.