நடிகர் விஜய் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். இவர் நடிப்பில் உருவாகி வரும் GOAT திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகிறது.
முழு நேர அரசியலில் களமிறங்கவிருக்கும் விஜய், தளபதி 69 தான் தன்னுடைய கடைசி படம் என அறிவித்துள்ளார். விஜய் நடித்து கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் லியோ. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.
கலவையான விமர்சனங்களை பெற்று இப்படம் உலகளவில் ரூ. 598 கோடி வரை வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது. விஜய் கேரியரில் அதிக வசூல் செய்த திரைப்படமாகவும் லியோ மாறியுள்ளது.
லியோ படத்தில் விஜய்யின் மகளாக இயல் என்பவர் நடித்திருந்தார். குழந்தை நட்சத்திரமாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நடிகை இயல் தனது அம்மா மற்றும் ட்வின் சகோதரனுடன் இணைந்து சூர்யாவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.
ஆம், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யாவுடன் லியோ படத்தில் விஜய்க்கு மகளாக நடித்த நடிகை இயல் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Comments are closed.