பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸுக்கு பாதாள உலகத்தில் இருந்து மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை புலனாய்வு அமைப்புகளால் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக அமைச்சர் திரான் அலஸின் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு புலனாய்வு அமைப்புகள் கோரியுள்ளன.
மேலும், பாதாள உலகத்தையும்,போதைப் பொருளையும் ஒடுக்குவதற்கான தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் பொலிஸாருக்கு பணிப்புரை வழங்கியுள்ள நிலையில், இந்த நடவடிக்கையின் கீழ் பெருமளவான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாகவே அமைச்சருக்கு பாதாள உலக கும்பல்கள் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எத்தனை பாதாள உலக அச்சுறுத்தல்கள் வந்தாலும் போதைப்பொருள் மற்றும் பாதாள உலக ஒழிப்பு நடவடிக்கை நிறுத்தப்படாது என அமைச்சர் திரான் அலஸ் நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.