ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியே வெற்றி பெறும் : அனுர குமார

12

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஐம்பது வீத வாக்குகளை தமது கட்சியால் நிச்சயமாகப் பெற முடியும் என தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவர் அனுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தினை அவர் நேற்றையதினம் (31) ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலொன்றின் போது கூறியுள்ளார்.

மேலும், எத்தனை ஜனாதிபதி வேட்பாளர்கள் முன்வைக்கப்பட்டாலும், வாக்காளர்கள் ஜனாதிபதித் தேர்தலில் இரண்டு பிரதான வேட்பாளர்களை மட்டுமே மையப்படுத்துவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இரண்டு பிரதான வேட்பாளர்களுக்கு இடையே தேசிய மக்கள் சக்தி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளதோடு, அதிக வாக்குகளைப் பெற்று தமது கட்சி நிச்சயமாக ஜனாதிபதி தேர்தலில் வெற்றியடையும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் போட்டியானது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு இடையில் இடம்பெறாது என்றும் ரணிலுக்கும் தேசிய மக்கள் சக்திக்கு இடையிலேயே இடம்பெறும் என்றும் அனுர குமார திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

Comments are closed.