தோசைக்கு கணவரை திட்டி கோபத்தை காட்டிய மீனா, பதிலுக்கு முத்து செய்ததை பாருங்க… சிறகடிக்க ஆசை கியூட் புரொமோ
கதையில் அடுத்தடுத்து விறுவிறுப்பாக சென்றுகொண்டிருந்த சிறகடிக்க ஆசை சீரியலில் கடந்த 2 நாட்களாக சுவாரஸ்யமாக ஒன்றும் இல்லை.
மனோஜ் ஒருபக்கம் சாமியார் சொன்னார் என ஒவ்வொரு கிழமைகளிலும் நிறம் மாற்றி ஆடை அணிவது, தினமும் சாமி கும்பிடுவது என காமெடி செய்து வருகிறார்.
இன்னொரு பக்கம் மீனாவுடன் பூ வியாபாரம் செய்பவர்கள் மீனாவிடம் பெசரட்டு உன் கணவருக்கு சுட்டு கொடு ஏதாவது கூறுகிறாரா பார்ப்போம் என்று ரூ. 50 பந்தயம் வைக்கிறார்கள்.
இன்றைய எபிசோடில் ஆசை ஆசையாக மீனா முத்துவிற்கு தோசை வைக்க அவர் எதுவும் கூறாமல் கிளம்பிவிடுகிறார். ஆனால் வீட்டில் சாப்பிட்டவர்கள் அனைவருமே நன்றாக இருப்பதாக பாராட்டினார்கள்.
தற்போது வெளியாகியுள்ள சிறகடிக்க ஆசை கியூட் புரொமோவில், வீட்டிறகு வந்த முத்துவை தோசை சுட்டு கொடுத்தது குறித்து சண்டை போடுகிறார். அவரோ மீனாவிற்கு ஒரு புடவை வாங்கி வந்திருக்கிறார்.
பின் மீனாவை சமாதானம் செய்ய ஆசையாக பேசி அவரை சிரிக்க வைக்கிறார்.
Comments are closed.