ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகும் இலங்கை : சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அனுரவின் கூட்டம்

7


தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayaka) தலைமையில் நடைபெற்ற தேசிய அகில இலங்கை தாதியர் மாநாட்டில் அரச தாதியர்கள் சீருடையில் கலந்துகொண்டமை தேர்தல் சட்டங்களை மீறும் செயலாகும் என நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை கண்காணிக்கும் அமைப்பான கபே அமைப்பு தெரிவித்துள்ளது.

பொதுமக்களின் வரிப்பணத்தினால் வழங்கப்படும் சீருடையை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்துவது நிறுவனங்களின் சட்டவிதிகளையும் தேர்தல் சட்டத்தையும் மீறும் செயலாகும் என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், இந்த நடவடிக்கை தேர்தல் சட்ட விதிகளை மீறும் செயல் என, சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தலுக்கான மக்கள் இயக்கம், தேசிய தேர்தல் ஆணைக்குழுவுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Comments are closed.