ஜனாதிபதி தேர்தல்! களத்தில் இறங்குவதை உறுதிப்படுத்திய 4 வேட்பாளர்கள்

8

ஜனாதிபதி தேர்தலுக்காக இதுவரையில் 4 வேட்பாளர்கள் தமது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு ஊடக அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளது.

இதற்கமைய ரணில் விக்ரமசிங்க (சுயேட்சை), சரத் கீர்த்திரத்ன (சுயேட்சை), ஹிட்டிஹாமிலாகே தொன் ஓஷல லக்மால் அனில் ஹேரத் (அபிநவ நிவஹல் பெரமுன), ஏ.எஸ்.பி. லியனகே (இலங்கை தொழிலாளர் கட்சி) ஆகியோர் ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.

இந்நிலையில் ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடாத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று அறிவித்தது.

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் ராஜகிரிய, சரண மாவத்தையில் அமைந்துள்ள தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்தில் வேட்பாளர்கள் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Comments are closed.