அம்பாந்தோட்டையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூன்று பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளொன்று கடற்படை வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் 33 வயதுடைய மோட்டார் சைக்கிள் சாரதி உயிரிழந்துள்ளதுடன், கடற்படை வாகனத்தில் பயணித்த மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த விபத்தில் உயிரிழந்தவர் மற்றும் காயமடைந்தவர்கள் அம்பாந்தோட்டை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பில் அம்பாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments are closed.