ரணிலுக்காக அமைச்சு பதவியை தியாகம் செய்யத் தயாராகும் பிரதான அரசியல்வாதி

17

ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க, எதிர்வரும் சில தினங்களில் தனது அமைச்சு பதவியில் இருந்து விலகத் தயாராக உள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்ட தேர்தல் பிரசாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அடிப்படையில் ஜனாதிபதியின் அனுமதியுடன் பதவி விலகல் இடம்பெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரசன்ன ரணதுங்க தற்போது குற்றவியல் வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதையடுத்து ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடுங்காவல் தண்டனையை அனுபவித்து வருகிறார்.

தமக்கு விதிக்கப்பட்ட இடைநிறுத்தப்பட்ட தண்டனையில் இருந்து விடுவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு எதிர்வரும் செப்டெம்பர் 12ஆம் திகதி விசாரணைக்கு வரவுள்ளது.

இந்த நிலையில், ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் இந்த வழக்கை அழைப்பதால் ஜனாதிபதித் தேர்தல் பிரசார நிகழ்ச்சிகளுக்கு இடையூறு ஏற்படலாம் என்பதால், இந்த பதவி விலகல் இடம்பெறவுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சமர்ப்பித்த மேன்முறையீட்டு மனுவை ஐவர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

எவ்வாறாயினும், எதிர்வரும் காலங்களில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணத்தை முன்வைத்து இடைக்கால அடிப்படையில் பதவி விலகல் செய்த பின்னர் ஜனாதிபதியின் தேர்தல் பிரச்சாரத்தில் முழு நேரத்தையும் அர்ப்பணிப்பார் என அரசியல்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments are closed.