அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்கு இந்த வாரத்தில் தீர்வு வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் (Colombo) நேற்று (22.07.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அதிபர்கள் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்கங்களினால் எழுப்பப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் இரண்டு வார காலம் சட்டப்படி வேலை தொழிற்சங்கப் போராட்டத்தை அறிவித்துள்ளன. இன்றைய தினம் முதல் இரண்டு வாரங்களுக்கு இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
எவ்வாறெனினும், இந்தப் போராட்டமானது மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை பாதிக்காது என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பொருளாதார நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியிலும் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில்நிலவும் 16000 ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Comments are closed.