அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளதோடு புதிய வேட்பாளராக கமலா ஹரிஸை (Kamala Harris) ஆமோதித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு (Donald Trump) எதிரான விவாதத்தில் பைடனின் விவாதத் திறன் மிகவும் குறைவாக இருந்தது.
அதனைத் தொடர்ந்து, அவரை தேர்தல் போட்டியிலிருந்து விலகிக் கொள்ளுமாறு ஜனநாயகக் கட்சியின் (Democratic Party) மூத்த தலைமைகள் அழுத்தம் பிரயோகித்திருந்தன.
இதனையடுத்தே, பைடன் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2020ஆம் ஆண்டு எனது முதல் முடிவு கமலா ஹரிஸை துணைத் தலைவராக தேர்ந்தெடுத்தது தான் எனவும் இதுவே நான் எடுத்த சிறந்த முடிவு எனவும் அவர் தனது ‘X’ தளத்தில் இட்ட பதிவில் கூறியுள்ளார்.
அத்துடன், தேர்தல் வேட்பாளராக கமலா ஹரிஸ் களமிறங்க தனது முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஜனநாயக ஆதரவாளர்கள் ஒன்று திரண்டு ட்ரம்ப்பை தோற்கடிக்க வேண்டிய நேரமிது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Comments are closed.