மனைவி விஜயாவிடம் பேசாமல் இருக்கும் அண்ணாமலை.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து நடக்கப்போவது

18


சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் வரும் வாரம் நடக்கப்போகும் விஷயங்கள் குறித்து ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி, தங்க நகை கவரிங் நகையாக மாறியது விஜயா மற்றும் மனோஜால் தான் என கண்டிபிடித்தபின், ஏமாற்றிய பணத்தை திருப்பி தரவேண்டும் என்றும், செய்த தவறுக்காக விஜயா மன்னிப்பு கேட்கவில்லை என்றால் இனி விஜயாவிடம் நான் பேசவே மாட்டேன் என்றும் அண்ணாமலை கூறியிருந்தார்.

மேலும் விஜயா கையால் தண்ணி கூட வாங்கி குடிக்க மாட்டேன் என அண்ணாமலை அதிரடியாக கூறிவிட்டார். இந்த நிலையில் விஜயாவிடம் பேசாமல் இருக்கும் அண்ணாமலை சமாதானம் செய்ய குடும்பத்தில் உள்ள அனைவரும் முயற்சி செய்கிறார்கள். இந்த நிலையிலும், இப்படியொரு சூழல் ஏற்பட்ட மீனா தான் காரணம் என விஜயா கூறுகிறார்.

ஆனால், இந்த ப்ரோமோவில் எதிர்பார்த்த சுவாரஸ்யம் இல்லை. பொறுத்திருந்து பார்ப்போம் வரும் என்ன வேறு என்னவெல்லாம் நடக்கப்போகிறது என்று.

Comments are closed.