நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமிற்கு பிணை

18

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கட்டடம் ஒன்றுக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக முன்னதாக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அவர் கற்பிட்டி காவல்துறையில் சட்டத்தரணியுடன் இன்று முற்பகல் சரணடைந்த போது கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து புத்தளம் நீதவான் நீதிமன்றில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதற்கமைய அவரை இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் செல்ல புத்தளம் நீதவான் நீதிமன்றம் அனுமதியளித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் இன்று காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு எதிரான நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதற்கமைய, அலி சப்ரி ரஹீம் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Comments are closed.