இன்றைய ராசிபலன் ஜூலை 20, 2024, குரோதி வருடம் ஆடி 4, சனிக் கிழமை, சந்திரன் தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். ரிஷப ராசியில் உள்ள கிருத்திகை, ரோகிணி சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். இன்று உங்களுக்கு பதவி, கௌரவம் உயரும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இன்று வெளி உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்கவும். அரசியல் துறையில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். வணிகஸ்தர்களுக்கு லாபம் கிடைக்கும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரிகளுக்கு மிகவும் சாதகமான நாள். உங்கள் வேலையில் வெற்றி கிடைக்கும். சக ஊழியர்களுடன் இருந்த மன வருத்தம் தீரும். திருமணம் முயற்சியில் உள்ளவர்களுக்கு நல்ல வரன் அமையும். குடும்பத்துடன் ஆன்மீக சுற்றுலா செல்ல வாய்ப்பு உள்ளது. குடும்பத்தினருடன் சில சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். குடும்ப உறவுகள் மேம்படும்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் ஆக்கப்பூர்வமாகச் செயல்படுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் தங்களுக்கு விருப்பமான வேலைகளை செய்து முடிக்க வாய்ப்பு கிடைக்கும். இன்று உங்களுக்கு வேலையில் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். உங்கள் முயற்சிகளுக்கு குடும்ப உறுப்பினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வியாபாரம் தொடர்பாக சில பயணங்கள் மேற்கொள்ளலாம். மாணவர்கள் தேர்வில் சிறப்பான வெற்றியை பெறலாம்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று வேலைகளை முழு அர்ப்பணிப்புடன் செய்ய வேண்டிய நாள். இன்று தடைப்பட்ட உங்கள் வேலைகளை முடிக்க வாய்ப்பு கிடைக்கும். அலுவலக சூழல் சிறப்பாக இருக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உங்கள் குழந்தைகளிடமிருந்து நல்ல செய்தி கேட்பீர்கள். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் பிஸியான நாளாக இருக்கும். காதலுக்காக நேரத்தை செலவிட முடியாத சூழல் இருக்கும். இன்று ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வேலையை மேலதிகாரிகளின் தலையீடு கவலை தரும். வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டியது அவசியம். சொத்து வாங்க நினைப்பவர்களுக்கு சாதகமான நாள்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று பேச்சின் இனிமையால் உங்களின் வேலை மற்றும் தொழிலில் மரியாதை கிடைக்கும். உங்களின் வருமானம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் சில சுப நிகழ்ச்சிகள் குறித்த விவாதம் நடக்கும். இன்று வண்டி, வாகனம் ஓட்டும்போது கூடுதல் கவனம் தேவை. பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்ற முயற்சி செய்யுங்கள்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று வேலை தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்து மகிழ்ச்சியடைவீர்கள். வியாபாரம் தொடர்பாக புதிய திட்டத்தை தொடங்கலாம். அதன் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். வீடு, அணை தொடர்பான விஷயங்களில் பிரச்சனைகள் ஏற்படலாம். இன்று எதிரிகளை சமாளிக்க வேண்டியது இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் நேரத்தை செலவிடவும் வாய்ப்பு கிடைக்கும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று தொழில் தொடர்பாக புதிய திட்டங்கள் தீட்டி செயல்படுவோம். வணிகஸ்தர்களுக்கு வலுவான நாள். உங்களுக்கு நாள் முழுவதும் பல வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடவும், அவர்களுடன் விருந்து, விழாக்களில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும். வேலையில் பண ஆதாயத்திற்கான வாய்ப்புகள் அதிகம்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று குடும்ப தேவைக்காக பணம் அதிகமாக செலவு ஏற்படும். வியாபாரத்தில் பொன்னான வாய்ப்புகள் பெறுவீர்கள். இன்று நீங்கள் சிறிது ரிஸ்க் எடுத்தாலே பெரிய லாபத்தை பார்க்கலாம். இன்று உங்களின் நிதி நிலை மேம்படும். கடினமான சூழலில் தந்தையின் ஆதரவு தேவைப்படும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று பலவிதத்தில் உங்களுக்கு பொன்னான வாய்ப்புகள் பெறுவீர்கள். வியாபாரத்தில் உங்களின் கூட்டாளிகள் மூலம் நல்ல பலனை பெறுவீர்கள். இன்று குழந்தைகள் விஷயத்தில் பெரிய முடிவு எடுக்க வேண்டியது இருக்கும். நிலுவையில் உள்ள பணிகளை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். அண்டை வீட்டாருடன் வாக்குவாதம் செய்யாதீர்கள்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் ஆரோக்கியத்தையும் கவனம் தேவை. இன்று சூழல் உங்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். உங்களின் உணவு மற்றும் பானங்களில் கவனம் தேவை. வேலை மற்றும் வியாபாரம் தொடர்பாக அலைச்சல் அதிகரிக்கும். இன்று குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான கவலைகள் நீக்கும். காதல் வாழ்க்கை மேம்படும்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் சொந்தத் தொழிலில் இருந்த குறைகள் தீரும். வியாபாரத்தில் நீங்கள் எடுக்கக் கூடிய ரிஸ்குகள் கவனமாக எடுத்தல் நல்ல வெற்றி கிடைக்கும். இன்று உங்களின் பேச்சு, நடத்தையை மேம்படுத்த வேண்டும். இன்று புதிய சொத்து வாங்க முயற்சி செய்வீர்கள். மாணவர்களுக்கு படிப்பு தொடர்பான பிரச்சனைகள் தீரும்.
Comments are closed.