அந்த சமயத்தில் நானும் விஜய்யும் உண்மையில் அழுதுவிட்டோம்.. குஷ்பு பேட்டி

13


விஜய் நடிப்பில் உருவான வாரிசு திரைப்படம் கடந்த 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளிவந்த நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி படத்தை இயக்கியிருந்தார்.

மேலும் படத்தில் சரத்குமார், ரஷ்மிகா மந்தனா, ஷாம், பிரபு எஸ் ஜே சூர்யா, பிரகாஷ் ராஜ் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

அண்மையில் குஷ்பு அளித்த பேட்டியில், “வாரிசு படத்தில் எனக்கும், விஜய்க்கும் இடையிலான மிகவும் உணர்ச்சிகரமான காட்சிகள் படமாக்கப்பட்டன. அது ஒரு தனி சுவாரஸ்யமான ட்ராக், அது மிகவும் அழகாக இருந்தது. இறுதியில் அது குடும்பத்துடன் தொடர்புடையதாக இருக்கும்.

நான் நடித்த அனைத்து காட்சிகளும் விஜய்யுடன் தான் படமாக்கப்பட்டன. வேறு யாருடனும் எனக்கு அந்தப் படத்தில் காட்சிகள் இல்லை. ஆனால், அவை நீக்கப்பட்டுவிட்டன. இயக்குனர் வம்சி நேரில் வந்து, படத்தின் நீளம் அதிகமாக இருக்கிறது, அதனால் நீங்கள் நடித்த காட்சியை நீக்கவேண்டியதாக உள்ளது என்று கூறினார்.

அப்போது, நான் அவரிடம், ஒரு காட்சி கூட இருக்கக் கூடாது எனக் கூறினேன். அவரும் அதற்காக உறுதியளித்தார். எனக்கும் விஜய்க்கும் இடையிலான அந்த காட்சிகள் மிகவும் உணர்ச்சிகரமான மற்றும் அழகான காட்சிகள். அவை படமாக்கப்பட்ட போது நானும் விஜய்யும் உண்மையாகவே அழுதுவிட்டோம்.

வாரிசு திரைப்படம் வெளிவந்த பின்னர் நானும் விஜய்யும் பேசும்போது, அவர் அந்தக் காட்சிகள் குறித்து பேசியிருக்கிறார். நீக்கப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்” என்றார்.

Comments are closed.