மூன்று நாட்களில் இந்தியன் 2 படம் செய்துள்ள வசூல்

14

உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 12ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் இந்தியன் 2. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தில் கமலுடன் இணைந்து சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும் மறைந்த நடிகர்கள் விவேக், நெடுமுடி வேணு, மாரிமுத்த மற்றும் மனோபாலா ஆகியோரையும் மீண்டும் இப்படத்தில் பார்க்க முடிந்தது.

இப்படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் பெருமான்மையான மக்கள் கொடுத்து வருகிறார்கள். படத்தின் நீளம் தான் இந்த விமர்சனங்களுக்கு காரணம் என சொல்லப்பட்ட நிலையில், படத்திலிருந்து 20 நிமிட காட்சிகளை ஷங்கர் தூக்கிவிட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், இந்தியன் 2 திரைப்படம் கடந்த 3 நாட்களில் செய்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 3 நாட்களில் உலகளவில் ரூ. 130 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. மேலும் தமிழகத்தில் மட்டுமே ரூ. 40 கோடி வரை வசூல் செய்துள்ளது.

Comments are closed.