ரஷ்யா(Russia) ஏற்றுமதி செய்த உக்ரைனுக்கு சொந்தமான தானியங்களுடன் வெளியேற முயன்ற வெளிநாட்டு சரக்குக் கப்பல் ஒன்றை அதிரடியாகக் கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது.
ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட கிரிமியன் தீபகற்பத்தில் இருந்து உக்ரேனிய தானியங்களை அந்த கப்பல் சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்ததாக கூறப்படுகிறது.
இதன்போது கப்பலின் மாலுமியையும் உக்ரைன் அதிகாரிகள் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கப்பலானது ஏற்கனவே ஒருமுறை கிரிமியா பகுதியில் இருந்து தானியங்களுடன் வெளியேறியுள்ளதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
Usko Mfu என்ற அந்த கப்பல் மற்றும் அதன் மாலுமிகள் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிக்குள் நுழைவதற்கான விதிகளை மீறியதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மேலும், அஜர்பைஜான் நாட்டவர் என அடையாளம் காணப்பட்ட அந்த மாலுமி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் வரையில் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் , மேற்கத்திய நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தாலும், இதுவரை இந்த விவகாரத்தில் முறையான தீர்வு எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.