YouTuber’s Net worth அதாவது சொத்து மதிப்பு குறித்து நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் தற்போது ஹுசைன் – மணிமேகலை YouTuber Net Worth குறித்து தான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நட்சத்திரம் தொகுப்பாளினி மணிமேகலை. இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருக்கிறார்.
இவர் தனது கணவர் ஹுசைன் உடன் இணைந்து YouTube பக்கத்தில் வீடியோக்களை அடிக்கடி பதிவு செய்வார். மக்கள் அதிகம் கவர்ந்த YouTube பிரபலங்கள் ஹுசைன் – மணிமேகலை. 1.94 மில்லியன் பின்தொடர்பவர்களை கொண்டுள்ள இந்த Youtube சேனலில் தற்போது வரை 431 வீடியோக்களை பதிவு செய்துள்ளனர்.
மேலும் இவர்கள் வெளியிடும் ஒவ்வொரு வீடியோவும், குறைந்தபட்சம் 300K வியூஸ் முதல் 1M வியூஸ் வரை செல்கிறது. இந்த நிலையில், ஹுசைன் – மணிமேகலை YouTube-ன் Net worth குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இவர்களுடைய Net worth $ 140K – $ 837K இருக்கும் என சொல்லப்படுகிறது. மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஒரு எபிசோடிற்கு ரூ. 60 ஆயிரம் வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.
மேலும் ஹுசைன் – மணிமேகலை இருவரும் இணைந்து புதிதாக பண்ணை வீடு ஒன்று கட்டி வருகிறார்கள். அதன் புகைப்படங்களை கூட மணிமேகலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது இணையத்தில் பரவலாக பேசப்படும் தகவல் மட்டுமே. இது எந்த அளவிற்கு உண்மையாக தகவல் என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.