கனடாவில் ஒரே நாளில் பாரியளவு உணவு பொருள் சேகரித்த உணவு வங்கி

16

கனடாவில் ஒரே நாளில் பெருந்தொகை உணவுப் பொருட்கள் நன்கொடையாக சேகரிக்கப்பட்டுள்ளது.

சர்ரே பகுதியில் அமைந்துள்ள குரு நானாக் உணவு வங்கி இவ்வாறு பாரியளவு உணவுப் பொருட்களை திரட்டியுள்ளது.

நான்காம் ஆண்டு நிறைவினை முன்னிட்டு இவ்வாறு உணவுப் பொருட்கள் திரட்டப்பட்டுள்ளன.

ஒரே நாளில் குறித்த உணவு வங்கி 384.5 தொன் எடையுடைய உணவுப் பொருட்களை திரட்டியுள்ளது.

வட அமெரிக்காவில் இவ்வாறு ஒரே நாளில் அதிகளவில் உணவுப் பொருட்கள் திரட்டப்பட்ட முதல் சந்தர்ப்பமாக இது கருதப்படுகின்றது.

சுமார் 11 மணித்தியாலங்களில் இவ்வாறு பாரியளவு தொகை உணவுப் பொருட்கள் திரட்டப்பட்டதாக உணவு வங்கியின் பிரதானி நீராஜ் வாலியா தெரிவித்துள்ளார்.

பேஸ்தா, அரிசி, சூப் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்கள் இவ்வாறு திரட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.  

Comments are closed.