இறப்பர் தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்ட மாணவி: எழுந்துள்ள சந்தேகம்

16

நிவித்திகல – வட்டபொட பகுதியிலுள்ள இறப்பர் தோட்டத்தில் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவியின் சடலம் மீட்கப்பட்ட இடத்திலிருந்து சில அடி தூரத்தில் மாணவியின் பாடசாலை புத்தகப் பை மற்றும் இரத்தக்கறை என்பன காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், சடலம் மீட்கப்பட்ட இடத்திற்கு அருகாமையில் இறப்பர் மரம் வெட்டப்பட்ட நிலையில் இருந்ததாகவும், பணியில் ஈடுபட்டிருந்தவர்களின் கவனக்குறைவால் மரத்தின் ஒரு பகுதி மாணவியின் தலையில் விழுந்திருக்கலாம் எனவும் மாணவியின் உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

எனினும், தமது மகளை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதற்கு உதவி கேட்ட போது அங்கிருந்தவர்கள் உதவவில்லை என மாணவியின் தாய் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்நிலையில், சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தி நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இரத்தினபுரி பதில் நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Comments are closed.