சற்றுமுன்னர் தீயுடன் சங்கமமானது சம்பந்தனின் பூதவுடல்

16


தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெருந்தலைவரான மறைந்த இராஜவரோதயம் சம்பந்தனின் பூதவுடல் சற்றுமுன்னர் திருகோணமலையில் உள்ள இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளது.

அவரின் இறுதிக் கிரியைகளில் அதிபர் ரணில் விக்ரமசிங்க, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பிரமுகர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தனின் இறுதி கிரியை நிகழ்வில் தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை கலந்துக்கொண்டுள்ளார்.

இன்னும் சற்று நேரத்தில் அதிபர் ரணிலும் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இராஜவரோதயம் சம்மந்தனின் இறுதி கிரியைகள் திருகோணமலையில் உள்ள இந்து மயானத்தில் இன்று(07) மாலை நடைபெறவுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவர் சம்பந்தனின் இறுதி கிரியைக்காக அதிபர் ரணில் விக்ரமசிங்க(Ranil wickremesinghe) ,பாரதிய ஜனதா கட்சி தமிழக தலைவர் அண்ணாமலை(K. Annamalai) பங்கேற்கவுள்ள நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இராஜவரோதயம் சம்பந்தனின் இறுதி கிரியைகள் திருகோணமலையில் உள்ள இந்து மயானத்தில் இன்று(07) மாலை இடம்பெறவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் இடம் பெற்று வருவதுடன் பெருந்திரளான மக்கள் அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர்.

அரசியல் பிரமுகர்கள், முப்படைகளின் உயரதிகாரிகள், என பலரும் திருகோணமலையில் உள்ள அன்னாரது இல்லத்தில் பூதவுடல் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.

இறுதி கிரியைக்காக அதிபர் ரணில் விக்ரமசிங்க ,பாரதிய ஜனதா கட்சி தமிழக தலைவர் அண்ணாமலை பங்கேற்கவுள்ள நிலையில் பலத்த பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு திருகோணமலை நகர் முழுதும் ஆழ்ந்தல் இரங்கல் தெரிவித்து இரா. சம்மந்தனின் உருவப்படம் பொறித்து தொங்கவிடப்பட்டுள்ளது.

இதில் தென்னிலங்கையை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள், வடகிழக்கு மலையகத்தை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் என பலரும் மேலும் கலந்து கொள்ளவுள்ளனர்.

Comments are closed.