கறுவா ஏற்றுமதி மூலம் இவ்வருடத்தின் முதல் 6 மாதங்களில் 15 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த தகவலை கறுவா அபிவிருத்தித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், குறித்த காலப்பகுதியில் 60 மெட்ரிக் தொன் கறுவா ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் ஜனக லிந்தர கூறியுள்ளார்.
இந்தநிலையில், மெக்சிகோ (Maxico), பெரு (Peru) மற்றும் அமெரிக்கா (USA) போன்ற நாடுகளுக்கே அதிகளவில் கறுவா ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கடந்த ஆண்டு 251 மெட்ரிக் தொன் கறுவா ஏற்றுமதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.