ஆசை ஆசையாய் வாங்கிய வீட்டை திடீரென அடமானம் போட்ட நடிகை தமன்னா.. என்ன காரணம்

14

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 80க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நாயகியாக வலம் வருபவர் நடிகை தமன்னா.

படங்களை தாண்டி வெப் தொடர்கள், விளம்பரங்கள் மூலமாகவும் நடிகை தமன்னா சம்பாதித்து வருகிறார். அண்மையில் அரண்மனை 4 படத்தில் வந்த அச்சச்சோ பாடல் மூலம் அனைவரையும் ஆட்டம் போட வைத்தார்.

தற்போது நடிகை தமன்னா குறித்து ஒரு விஷயம் வைரலாக சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

சினிமா பிரபலங்கள் படங்கள் மூலம் சம்பாதித்த பணத்தை சொந்த தொழில் ஆரம்பித்து அதன் மூலமாகவும் சம்பாதிப்பார்கள்.

அப்படி ஏற்கெனவே நடிகை தமன்னா நகைகடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில் மும்பை ஜுஹு பகுதியில் வணிக வளாகம் ஒன்றை நானாவதி கன்ஸ்ட்ரக்ஷனிடம் இருந்து 5 ஆண்டுகளுக்கு லீசுக்கு எடுத்திருக்கிறார்.

அதன் மாத வாடகை ரூ. 18 லட்சம், 4வது ஆண்டில் இருந்து ரூ. 20.16 லட்சமாகவும், 5வது ஆண்டில் ரூ. 20.96 லட்சமாகவும் உயருமாம்.

இதற்காக மும்பை அந்தேரி வீர தேசாய் சாலையில் இருக்கும் தனது 3 அபார்ட்மென்ட்டுகளை இந்தியன் வங்கியில் ரூ. 7.84 கோடிக்கு அடமானம் வைத்திருக்கிறாராம்.

ஜுன் 14ம் தேதி வீட்டை அடமானம் வைத்தவர் ஜுன் 27ம் தேதி லீசுக்கு வாங்கியிருக்கிறார்.

Comments are closed.