அப்பா வயது நடிகருக்கு மனைவியாக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. காசு தான் காரணமா?

14

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு 34 வயதாகும் நிலையில் அவர் 63 வயதாகும் நடிகருக்கு மனைவியாக நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதை அடுத்து இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ், தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். தமிழில் அவர் தற்போது மூன்று படங்களிலும் இரண்டு மலையாளம் மற்றும் ஒரு கன்னட படத்திலும் நடித்து வரும் நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் நாயகியாக நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.

அனில் ரவிபுடி இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படத்தில் வெங்கடேஷ் மனைவியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை இந்த படத்தின் பூஜை நடைபெற இருப்பதாகவும் இந்த பூஜையில் வெங்கடேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ள இருப்பதாகவும் தெரிகிறது.

தெலுங்கு நடிகர் வெங்கடேஷ்க்கு 63 வயதாகும் நிலையில் அப்பா வயதான நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு மிகப்பெரிய சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் ரஜினி, கமல், பாலகிருஷ்ணா, மம்முட்டி, மோகன்லால், உட்பட பல மாஸ் நடிகர்கள் 60 வயதை தொட்டும், 60 வயதை தாண்டியும் இருக்கும் நிலையில் அவர்களுக்கு ஜோடியாக 25 முதல் 35 வயதான நடிகைகள் தான் நடித்து வருகின்றனர் என்பதும், அந்த வகையில் தான் ஐஸ்வர்யா ராஜேஷ், வெங்கடேஷ் ஜோடியாக நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் என்றும் அவரது தரப்பினரால் கூறப்பட்டு வருகிறது.

Comments are closed.