500 கோடி வசூல்.. ஜவான் சாதனையை முறியடித்த பிரபாஸின் கல்கி..

11

கடந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ஜவான். இப்படம் உலகளவில் ரூ. 1200 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

குறிப்பாக முதல் வாரத்தின் இறுதியில் ரூ. 517 கோடிக்கும் மேல் வசூல் செய்து, இதுவரை எந்த இந்திய திரைப்படமும் செய்யாத வசூல் சாதனையை ஜவான் நிகழ்த்தி இருந்தது. இதனை அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமும் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருந்தனர்.

இந்த நிலையில், ஜவான் படத்தின் முதல் வாரத்தின் இறுதி வசூலை தற்போது கல்கி 2898 AD திரைப்படம் முறியடித்துள்ளது. நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வெளிவந்த திரைப்படம் கல்கி 2898 AD.

இப்படத்தின் முதல் வார இறுதி வசூல் குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதில் இப்படம் உலகளவில் முதல் வாரத்தின் இறுதியில் ரூ. 555 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என தெரிவித்துள்ளனர்.

முதல் வாரத்தின் இறுதியில் ரூ. 555 கோடிக்கும் மேல் கல்கி படம் வசூல் செய்ததால், ஜவான் படத்தின் வசூல் சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.