கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் உள்ள இராணுவ முகாம் காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு அளவீடு நிறுத்தப்பட்டுள்ளது.
புன்னைநீராவி கிராமத்தில் இராணுவ முகாம் அமைந்துள்ள காணியினை அளவீடு செய்வதற்காக இன்று(25.06.2024) நில அளவைத் திணைக்களத்தினர் சென்றுள்ளனர்.
குறித்த திணைக்கள உத்தியோகத்தர்களின் நடவடிக்கைகளினை காணி உரிமையாளர்களும், பிரதேச மக்களும் இணைந்து தடுத்து நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சண்முகம் ஜீவராஜ் குறித்த அளவீடு செய்யும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.