ரஷ்யா – உக்ரைன் போர் ஆரம்பித்து 3 ஆண்டுகள் கடந்த நிலையில் இருநாடுகளும் நடத்தும் நேரடி முதல் பேச்சுவார்த்தை இன்று இடம்பெறவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இப்போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க முனைப்புகாட்டிவரும் நிலையில் இரு தரப்பு பேச்சுவார்த்தையானது சர்வதேச முக்கியத்துவம்மிக்க ஒன்றாக மாறியுள்ளது.
இந்நிலையில் இதற்காக உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் அவரது பிரதிநிதிகள் துருக்கிக்கு சென்றுள்ளனர்.
அதன்படி துருக்கியில் இன்று நடைபெறும் ரஷ்யா – உக்ரைன் இடையே நேரடி பேச்சுவார்த்தையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் பங்கேற்கவில்லை.
அவர் தனது பிரதிநிதிகளை நேரடி பேச்சுவார்த்தைக்கு அனுப்பி வைக்க உள்ளதாக, ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ரஷ்யா சார்பில் வெளியுறவுத்துறையின் துணை அமைச்சர் மிக்கேல் காலுஜின், பாதுகாப்பு துறையின் துணை அமைச்சர் அலெக்சாண்டர் போமின், ரஷ்ய இராணுவ உளவுத்துறை தலைவர் இகோர் கோஸ்யுகோவ் உள்ளிட்டவர்கள் பங்கேற்க உள்ளனர்.