இஸ்லாமியவாத தலைமையிலான அரசாங்கத்தின் மீதான அனைத்துத் தடைகளையும் நீக்குவதாக அமெரிக்கா திடீரென அறிவித்ததைத் தொடர்ந்து, அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சிரியா – இஸ்ரேல் உறவுகள் குறித்து வலியுறுத்தியுள்ளார்.
சவூதி அரேபியாவில் நேற்று சிரியா ஜனாதிபதியை சந்தித்து, அந்நாட்டின்(சிரியாவின்) நீண்டகால எதிரியாக கருதப்படும் இஸ்ரேலுடனான உறவுகளை இயல்பாக்குமாறு கோரியுள்ளார்.
ஒரு தசாப்தத்திற்கும் மேலான இடம்பெற்ற உள்நாட்டுப் போருக்குப் பிறகு மீண்டும் சிரியாவை கட்டியெழுப்ப முயற்சிக்கும் திட்டத்திற்காக அமெரிக்கா விதித்த தடைகளை நீக்குவதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
எனினும் மத்திய கிழக்கு வருகையில் இஸ்ரோலை உள்ளடக்காத ட்ரம்பின் பயணம், அமெரிக்காவின் முன்னுரிமைகளில் இஸ்ரேல் எந்த இடத்தில் உள்ளது என்பது குறித்த சந்தேகங்களை இஸ்ரேலில் தூண்டியுள்ளது.
சிரியாவை இஸ்ரேல் மிகப்பெரிய எதிரிகளில் ஒரு நாடாக கருதுகிறது.
மேலும் இஸ்ரேலிய அதிகாரிகள் சிரியாவின் தலைவரான ஷாராவை ஒரு ஜிஹாதிஸ்ட் என்று தொடர்ந்து வர்ணித்து வருகின்றனர்,
இந்நிலையில் சிரியா மீதான தடைகளை நீக்குவதை இஸ்ரேல் எதிர்க்கிறது. மேலும், முன்னாள் ஜனாதிபதி பஷார் அல்-அசாத்தை கவிழ்த்து ஷரா ஆட்சிக்கு வந்ததிலிருந்து இஸ்ரேல் சிரியாமீது இராணுவத் தாக்குதல்களை அதிகரித்துள்ளது.